இலங்கை

சட்டவிரோத மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயன்ற மருந்து மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கற்பிட்டியில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினர் கடந்த மாதம் 30ஆம் திகதி கற்பிட்டி இப்புன்தீவு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த டிங்கி படகு ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

 

 

 

அப்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

 

 

கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், டிங்கி படகு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மருந்து மாத்திரைகள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button