இலங்கை

புத்தளம் காவல்துறைக்கும் விமானப்படையினருக்கும் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து விசாரணை.

இலங்கை விமானப்படையின் கல்பிட்டிய துப்பாக்கிச் சுடும் தளத்தில் 17 ஜூன் 2026 அன்று நடைபெற்ற வெடிகுண்டு அகற்றும் பயிற்சியின் போது நிகழ்ந்த சம்பவம் குறித்து ஒரு சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மூன்று நபர்கள் முன் அனுமதி அல்லது அறிவிப்பு இன்றி துப்பாக்கிச் சுடும் தளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்தனர்.

 

 

 

பணியில் இருந்த ஏழு விமானப்படை வீரர்களும் ஒரு காவல்துறை சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரியும் அந்த மூன்று பொதுமக்களின் அடையாளம் குறித்து விசாரித்தனர். அவர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி என்றும், மற்ற இருவரும் அவருடன் வந்த பொதுமக்கள் என்றும் உறுதி செய்யப்பட்டது. விசாரணையின் போது, இரு தரப்பினருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

 

 

 

வெடிகுண்டு அகற்றும் பயிற்சி நடைபெறும் காலத்தில், சம்பந்தப்பட்ட பகுதி ஒரு பாதுகாப்பற்ற பகுதியாக அப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் . அங்கு பொதுமக்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது மேலும் அப்பகுதிக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு இலங்கை விமானப்படையிடமே உள்ளது .

 

 

 

அதன்படி, இலங்கை விமானப்படை தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அபாயகரமான சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 

 

 

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, விமானப்படைத் தளபதி ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button