இலங்கை

அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

இதற்காக அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பது, துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் சமூக பங்களிப்புடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளது.

 

 

 

மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button