இலங்கை

செம்மணியில் மேலும் இரண்டு மனித என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 22ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இன்றைய அகழ்வின் போது 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் 341 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 327 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மனித என்புக்கூட்டு குவியல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த என்புக்கூட்டு குவியல் இதுவரையிலான அகழ்வு பணிகளில் அடையாளப்படுத்தப்பட்ட மனித என்புக்கூட்டு குவியலில் 23 ஆவது குவியல் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button