இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி நேற்று (06) போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் அது இன்றையதினமும் இடம்பெற்றது.

 

 

 

யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றம் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை சுகாதாரத் தொண்டர்கள் குறித்த போராட்டத்தில் குதித்தனர்.

 

 

 

இதன்போது நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களுக்கும் யாழ்ப்பாணம்போது நான் வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

 

 

 

பின்னர் நேர்முகத் தேர்வுக்கு வந்த அதிகாரி ஒருவர், இன்று பிரச்சினை நடப்பதால் வேறு ஒரு தினத்திற்கு நேர்முகத் தேர்வினை நடாத்தவுள்ளதாக தெரிவித்த நிலையில் நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். இருப்பினும் சுகாதார தொண்டர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button