
கடந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக, 515 பட்டதாரி தாதியர்களுக்கு இன்று (29) உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த புதிய நியமனங்கள் அனைத்தும் தரம் III (Grade III) தாதிய உத்தியோகத்தர் பதவிகளுக்காக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டிற்குப் பின்னர் பட்டதாரி தாதியர்களுக்கான நியமனங்கள் எதுவும் வழங்கப்படாதிருந்த நிலையில், நீண்ட இடைவெளியின் பின்னரே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு புதிதாக நியமனம் பெறும் பட்டதாரி தாதியர்கள் அனைவரும், நாடு தழுவிய ரீதியில் உள்ள முக்கிய அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் போதனா மருத்துவமனைகளில் உடனடியாகப் பணிகளில் அமர்த்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது
.இதேவேளை, தற்போதைய நிலவரப்படி இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையில் மொத்தம் 43,553 தாதிய உத்தியோகத்தர்கள் சேவையாற்றி வருவதாக சுகாதார அமைச்சு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.





