முல்லை மண்ணின் மைந்தன் வைத்தியகலாநிதி வீ.சண்முகராஜாவிற்கு மகத்தான மதிப்பளிப்பு!
“மருத்துவ சேவை என்பது ஒரு தொழில் அல்ல; அது மனித உயிரைக் காக்கும் புனிதப் பொறுப்பு” என்பதற்கு இலக்கணமாகத் திகழும் முல்லைத்தீவு மண்ணைச்சேர்ந்த வைத்திய கலாநிதி வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா அவர்கள், முல்லைத்தீவு மண்ணில் ‘தேசத்தின் மருத்துவ மகுடம்’ என்னும் உயரிய விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

1968 ஆம் ஆண்டு ஆடி மாதம் 11 ஆம் நாள், முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் வீரகத்திப்பிள்ளை – கனகம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
முள்ளிவளை வித்தியானந்தாக் கல்லூரியின் மாணவத்தலைவனாக விளங்கி, அங்கிருந்து பல்கலைக்கழகம் செல்லும் தன் கனவை நனவாக்கினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பயின்று மருத்துவரானார்.
தமிழீழத்தில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்களும் குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒடுக்கப்பட்ட வேளையில் சிறிலங்கா அரச பயங்கரவாத்த்தின்
“குண்டு மழைக்குள்ளும், எந்த அடிப்படை வசதிகளும் அற்ற சூழலிலும் தன் உயிரைப் பணையம் வைத்து மக்களின் உயிர் காத்த உன்னத மனிதர்.”
1991 ஆம் ஆண்டு ஒரு முதலுதவியாளனாக இணைந்து தமிழர்களின் விடுதலைப்பயணத்தில் மருத்துவப் பணியைத் தொடங்கினார்.
வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றி, பல்லாயிரக்கணக்கான கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிரசவம் பார்த்து, கைதேர்ந்த மருத்துவராகப் போற்றப்பட்டார்.
2009 போரின் இறுக்கமான காலகட்டங்களில், குண்டு மழைகளுக்கு மத்தியில், எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற இடங்களில் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு, காயமடைந்த புலி வேங்கைகளுக்கும் பொதுமக்களுக்கும் இரவு பகல் பாராது மருத்துவ சிகிச்சையளித்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்றினார்.
இறுதிப்போரின் உச்சத்தில் மக்கள் பணி செய்த காரணத்தினால் இலங்கை அரச பயங்கரவாத்த்தால் கைது செய்யப்பட்டார்.
எல்லாம் இழந்த பின்னரும், எஞ்சியிருக்கும் தனது அனுபவமும் மருத்துவப் படிப்பும் மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற துடிப்புடன் மீண்டும் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் நோக்கித் தனது காலடிகளை எடுத்து வைத்தார்.
அறிவும், அனுபவமும், மனிதநேயமும் கொண்டு, பலரின் வாழ்வில் நம்பிக்கையின் ஒளியை ஏற்றியுள்ள இவரது புனிதப் பயணம் எண்ணற்ற மக்களின் இதயங்களில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது.
தன் வாழ்வையே மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த இந்த முல்லை மண்ணின் மைந்தனுக்கு, முல்லைத்தீவு மக்கள் ஒன்றுதிரண்டு ‘தேசத்தின் மருத்துவ மகுடம்’ விருது வழங்கி தங்களின் நன்றியையும் அன்பையும் பிரமாண்டமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
தன் வாழ்வையே மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த இந்த முல்லை மண்ணின் மைந்தனுக்கு, முல்லைத்தீவு மக்கள் ஒன்றுதிரண்டு ‘தேசத்தின் மருத்துவ மகுடம்’ விருது வழங்கி தங்களின் நன்றியையும் அன்பையும் பிரமாண்டமாக வெளிப்படுத்தியுள்ளனர்.





