இலங்கை

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையுமே தமிழ்நாட்டிற்கு கொடுங்கள்: நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி ஆவேசம்!

கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள் அவர்கள் எங்களை பாதுகாத்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எமது இதயத்தை கவர்ந்த தமிழ் நாட்டு முதல்வராகவுள்ள விஜய்க்கு அடக்கப்பட்ட தமிழன் என்ற ரீதியில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்த அர்ச்சுனா எம்.பி தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

 

வட மாகாணத்தில் தீவுப் பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

விஜய் கச்சதீவை கேட்டதற்கு ஜனாதிபதி வழங்க முடியாது என கூறியுள்ளார். ஆனால் கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும். தமிழக மக்கள் எங்களை பாதுகாத்துக்கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button