இலங்கை

சிறுபோகத்திற்கான உர விநியோகம் – போக்குவரத்து கட்டண உயர்வால் விவசாயிகள் கவலை

சிறுபோகத்திற்காக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் உரத்திற்கான போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள கமநல சேவை நிலையங்களுக்கு உரத்தைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் 50 ரூபாவிலிருந்து 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

மேலும், இந்த நிலையங்களில் ஒரு பை உரம் 9,550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 

நெற்செய்கைக்காக ஏக்கருக்கு 90 கிலோ யூரியா உரம் தேவைப்படுவதாக விவசாயத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் போதுமான உர விநியோகத்தை வழங்க முடியாது என விவசாய பிரதி அமைச்சர் நிமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை அம்பாறை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிறுபோகத்திற்கான நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் கடந்த நிலையிலும், தேவையான அளவு உரம் உரிய முறையில் தமக்கு விநியோகிக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றன

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button