இலங்கை

ஹஜ் யாத்திரை பருவம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை பருவம் நேற்று தொடங்கியுள்ளது.

 

அதற்கமைய, இலங்கையிலிருந்து 325 யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

யாத்ரீகர்களை ஏற்றிய சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு வானூர்தி நேற்று இரவு 9:05 மணிக்கு ஜித்தாவை நோக்கிப் புறப்பட்டது.

 

இந்தநிலையில், 2026 ஹஜ் பருவத்திற்காக இலங்கையிலிருந்து மொத்தம் 3,500 யாத்ரீகர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

சவூதி ஏர்லைன்ஸ் தவிர, கட்டார் ஏர்லைன்ஸ் மூலமாகவும் யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button