
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளைக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.





