
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ள நிலையில், இம்முறை புத்தாண்டு பலகாரங்கள் அடங்கிய ‘கேவிலி’ (Kevili) மேசையைத் தயார் செய்வதற்கான செலவு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
வெரிட்டே ரிசேர்ச்சின் பொது நிதி (Public Finance) அமைப்பு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு பலகாரங்களுக்கான மொத்த செலவு 7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 5,414 ரூபாயாக இருந்த சராசரி புத்தாண்டு பலகார மேசையின் செலவு, நடப்பாண்டில் 5,795 ரூபாயாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக சில முக்கிய பலகாரங்களின் விலை இம்முறை அதிரடியாக உயர்ந்துள்ள. புத்தாண்டு இனிப்பு பலகாரத்திற்கான செலவவு 25.8% ஆக விலை அதிகரித்துள்ளது.
தொதல் (Dodol) 16.2% விலை உயர்ந்து 1,322 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. பட்டர் கேக்கின் விலை 12.8% ஆக அதிகரித்துள்ளது.
வாழைப்பழம் ஒரு கிலோவிற்கு 9.2% விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கொக்கிசிற்கான விலை 7.1% வரை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுகளுக்கு மத்தியில், பால் சோறு தயாரிப்பதற்கான செலவு கடந்த ஆண்டை விட 14.1% குறைந்துள்ளமை பொதுமக்களுக்குச் சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
முன்கவும் மற்றும் காவும் போன்ற பலகாரங்களின் விலையில் பெரிதளவு மாற்றங்கள் ஏதுமின்றி நிலையாகக் காணப்படுகின்றன





