இலங்கை

பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டம்: விளையாட்டு நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டியது என்ன?

இலங்கையின் கலாசாரத்தில் விழாக்களும் அதனுடன் இணைந்த விளையாட்டுப் போட்டிகளும் பிரிக்க முடியாத அங்கங்களாகும்.

 

இப்போட்டிகளின் போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அவசர மருத்துவ நிலைகளைத் தடுக்கும் நோக்கில், சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் தடுப்புப் பிரிவு 2026 ஆம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

உடல் தகுதிப் பரிசோதனை:மாரத்தான், சைக்கிள் ஓட்டம் போன்ற நீண்ட நேரப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் 6 வாரங்களுக்கு முன்பே பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

மருத்துவச் சான்றிதழ்: ஏற்கனவே உடல்நலப் பாதிப்பு உள்ளவர்கள் முறையான மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

 

முதலுதவி வசதிகள்: போட்டி நடைபெறும் இடங்களில் முறையான முதலுதவி நிலையங்கள் மற்றும் தகுதிவாய்ந்த மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

அவசரப் போக்குவரத்து: நோயாளிகளை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் அல்லது பொருத்தமான வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் (முச்சக்கர வண்டிகள் இதற்குப் பொருத்தமற்றவை).

மதுபானத் தடை: மது போதையில் போட்டிகளில் பங்கேற்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

 

அனைத்து விளையாட்டுக்களுக்குமான தனித்துவமான வழிகாட்டுதல்கள்

 

இந்த வழிகாட்டுதல் கையேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விளையாட்டுகளின் பட்டியல் மற்றும் அவற்றுக்கான முக்கிய பாதுகாப்பு விதிகள்

தலையணை சண்டை (Pillow Fight)

 

தலையணைகள் மென்மையானதாக (சுமார் 650 கிராம்) இருக்க வேண்டும்.

 

கீழே விழும் பகுதியில் மென்மையான மெத்தைகள் அல்லது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

 

ஊர் சுற்றோட்டப் போட்டி (Cross Country Running)

 

ஓட்டப்பாதை பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

சைக்கிள் ஓட்டுதல்

 

மிதிவண்டிகள் மற்றும் தலைக்கவசங்களின் (Helmets) தரத்தைப் பரிசோதிக்க வேண்டும்.

 

நீச்சல் போட்டிகள் (Swimming)

 

ஆழம் மற்றும் நீரின் தரம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும்.

 

உயிர் காக்கும் வீரர்கள் (Lifeguards) கட்டாயம் பணியில் இருக்க வேண்டும்.

 

படகோட்டுதல் (Rowing)

அனைத்து போட்டியாளர்களும் மிதவை அங்கிகளை (Life jackets) அணிந்திருக்க வேண்டும்.

 

தேசிக்காய் கரண்டி ஓட்டம் (Lime and Spoon Race)

 

ஓட்டப்பாதை தடைகள் மற்றும் கற்கள் இன்றி சமமாக இருக்க வேண்டும்.

 

சறுக்கு மரம் ஏறுதல் (Climbing the Greasy Pole)

 

மரம் உறுதியாக நடப்பட்டிருக்க வேண்டும்.

 

கீழே விழும் போது பாதிப்பு ஏற்படாதவாறு வைக்கோல் அல்லது மென்மையான மணல் பரப்பப்பட்டிருக்க வேண்டும்.

 

கயிறு இழுத்தல் (Tug-of-War)

 

உறுதியான மற்றும் சேதமடையாத கயிறுகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

 

கயிறுகளை மரத்திலோ அல்லது தூண்களிலோ கட்டி இழுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 

சாக்கு ஓட்டம் (Sack Race)

உயர்தரமான மற்றும் கிழிசல்கள் இல்லாத சாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

 

பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளாதவாறு பாதைகளை (Lanes) ஒதுக்க வேண்டும்.

 

இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களைக் குறைத்து, விழாக் கொண்டாட்டங்களை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்ய முடியும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்துகிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button