உலகம்

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை – அமெரிக்காவின் அறிவிப்பு

இஸ்லாமாபாத்தில் பல மணிநேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினராலும் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

 

பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கா சமர்ப்பித்த நிபந்தனைகளை ஈரான் ‘ஏற்க விரும்பவில்லை

இந்தநிலையில் ஈரானின் இந்த நிலைப்பாடு, அமெரிக்காவை விட ஈரானுக்குத்தான் அதிக பாதகமான செய்தியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அமெரிக்கா தனது “இறுதி மற்றும் சிறந்த” பரிந்துரையை ஈரானிடம் முன்வைத்துள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் அறிவித்துள்ளார்.

 

கடந்த 21 மணிநேரத்தில் டொனால்ட் டிரம்ப்புடன் சுமார் 10 முறைக்கும் மேலாகத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றதாக ஜே.டி. வேன்ஸ் தெரிவித்தார்.

 

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சி செய்யாது என்பதற்கான “உறுதியான வாக்குறுதியை” அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நீண்ட கால அடிப்படையில் அணு ஆயுதக் கனவை ஈரான் கைவிட வேண்டும் என்பதே ட்ரம்பின் முக்கிய இலக்காகும்.

 

“நாங்கள் மிகவும் நெகிழ்வாகவும், அனுசரித்தும் நடந்துகொண்டோம். ஆனால் எங்கள் நிபந்தனைகளை ஏற்க ஈரான் தயாராக இல்லை என வேன்ஸ் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button