இலங்கை

நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெறாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், மே மாதம் வரை எரிபொருள் கையிருப்பு இருப்பதாக கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார்,

 

நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதற்காகப் போதுமான இருப்புகளை கொள்முதல் செய்வதன் மூலம், எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயல்பாட்டை எளிதாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

 

இதன்படி, காசோலைகளை முதல் நாளே முன்பதிவு செய்யும் பிரிவிற்கோ அல்லது மொத்த முனையத்திற்கோ வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், எரிபொருள் பெற்றுக்கொள்வதில் ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்க்க முடியும் என கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் இடம்பெற்றுள்ள பாரிய அளவிலான QR குறியீடு மோசடிகள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

டிஜிட்டல் பொருளாதார அமைச்சால் உத்தியோகபூர்வமாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தொடர்ந்து கடந்த 15ஆம் திகதி முதல் QR குறியீடு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

QR முறைமையில் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால இற்றைப்படுத்தல்களைப் பயன்படுத்தி, முறையற்ற வகையில் QR குறியீடுகளை உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button