இலங்கை

பிலிப்பைன்ஸை சென்றடைந்த பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அழைப்புக்கமைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

 

அவர் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த நிகழ்வுகளில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மணிலாவில் உள்ள நினோய் அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸுக்கான இலங்கை தூதுவர் டாக்டர் சானக தல்பஹேவா (Chanaka Talpahewa), பிலிப்பைன்ஸ் அரச அதிகாரிகள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

 

இந்த விஜயத்தின் போது, மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

 

மகளிர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து, பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடன் பிரதமர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button