இலங்கை

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி – மீண்டெழுமா ‘சுற்றுலாத் தீவு

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சாதனை அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்த இலங்கை, மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது.

 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வானூர்தி போக்குவரத்துத் தடைகளே இதற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகின்றன.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு ஜனவரியில் 277,327 பயணிகளும், பெப்ரவரியில் 279,328 பயணிகளும் வருகை தந்தனர்.

 

மார்ச் 1 முதல் மார்ச் 4 வரை 23,116 பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (30,824) ஒப்பிடுகையில் 25 வீத வீழ்ச்சியாகும்.

மார்ச் 4 வரையான கணக்கின்படி, 2026 இல் இதுவரை மொத்தம் 579,771 பயணிகள் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 10.7 வீத வளர்ச்சியாகும்.

 

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சுமார் 34 வீதமான பேர் மத்திய கிழக்கு நாடுகளின் வானூர்தி முனையங்கள் வழியாகவே பயணிக்கின்றனர்.

 

போர் காரணமாக வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதாலும், ஆயிரக்கணக்கான வானூர்திகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், ஐரோப்பிய சந்தையிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. இது இலங்கைக்கு பல பில்லியன் ரூபா வருமான இழப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மார்ச் முதல் 4 நாட்களில் இந்தியாவிலிருந்து (23 வீதம்) 5,275 பயணிகளும் ரஷ்யாவிலிருந்து (10 வீதம்) 2,347 பயணிகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (8 வீதம்) 1,875 பயணிகளும் சீனாவிலிருந்து (8 வீதம்) 1,809 பயணிகளும் (கடந்த ஆண்டை விட பாரிய வளர்ச்சி), அவுஸ்திரேலியாவிலிருந்து (6 வீதம்) 1,296 பயணிகளும் வருகைத் தந்துள்ளனர்.

 

மேலும் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

 

இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஆய்வாளர்கள் சில முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

 

சிங்கப்பூர், போங்கொக் மற்றும் கோலாலம்பூர் போன்ற தென்கிழக்கு ஆசிய வானூர்தி முனையங்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலம் ஐரோப்பிய பயணிகளுக்கான பாதையை உறுதிப்படுத்தலாம்.

 

வளைகுடா நாடுகளுக்குச் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தங்கள் பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். அவர்களை ஈர்க்கும் வகையில் இலங்கை தன்னை ஒரு ‘பாதுகாப்பான மற்றும் சிறந்த மாற்றுத் தலம்’ என விளம்பரப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

 

தற்போது இலங்கையில் தங்கியுள்ள மற்றும் வானூர்தி தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்குத் தேவையான உதவிகளை அதிகாரிகள் வழங்கி வருவதுடன், வானூர்தி நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களை மீள வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button