கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் ஈரானுக்கான தனது சில விமான சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தும் காலத்தை ஜூன் 30 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய கால அட்டவணையின்படி, மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை கட்டார் தலைநகருக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படும்
இந்த நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில் ஈரானுக்கான மற்ற அனைத்து கட்டார் ஏர்வேஸ் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





