இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் மின் சேவைக்கு அதிக வரவேற்பு – 08 மில்லியன் மக்கள் அணுகல்

கடந்த வருடம் 08 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மின்-சேவைகளை நிகழ்நிலை வழியாக அணுகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

மக்கள் www.elections.gov.lk என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த மின்-சேவைகளை பெறலாம்.

 

வாக்காளர் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கும் வசதியும் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதன் மூலம், கிராம அலுவலர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், வாக்காளர்கள் தங்களது பதிவு விபரங்களை நிகழ்நிலையில் சரிபார்க்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இளம் வாக்காளர்களுக்கான நிகழ்நிலை பதிவு வசதியும் இந்த இந்த இணையத் தளம் மூலம் வழங்கப்படுகின்றது.

 

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு முதல் வாக்காளர் பதிவேட்டை அணுக முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button