
மலையகத்திலுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஹைதரபாத் மற்றும் ஊட்டியில் குறித்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வுக்காக பதுளை, நுவரெலியா, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் 20 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு இந்த செயலமர்வு நடைபெறவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இதன்போது, உள்ளூராட்சி முறைகள், இலங்கையின் உள்ளூராட்சி சட்டதிட்டங்கள் மற்றும் தலைமைத்துவ பயிற்சி என்பன வழங்கப்படவுள்ளன.
இந்தத் திட்டம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு கொழும்பில் நடத்தப்பட்டதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.




