
தேசிய மக்கள் சக்தியில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மௌனமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அவர்கள் மக்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பதை விடுத்து வேறு வேலைகளுக்கு முன்னுரிமையளிப்பதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்க் கட்சியில் இருந்தாலும் தமது மக்களுக்காக சண்டையிட்டு அவர்களது தேவைகளை நிறைவேற்ற அயராது உழைத்ததாக அவர் கூறினார்.
எமது மக்கள் என்ற உணர்வு ஏன் தற்போதைய அரசாங்கத்தின் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை என்ற கவலை தனக்கு உள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்





