இலங்கை

ஓர் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக 310 ரூபாவை தொட்ட டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆகப் பதிவாகியுள்ளது.

2024 பெப்ரவரி 29 ஆம் திகதிக்குப் பின்னர் டொலரின் சராசரிப் பெறுமதி இவ்வாறு 310 ரூபாய் என்ற எல்லையைக் கடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் படி, இன்று (07) ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 306.28 ஆகவும், விற்பனை விலை ரூ. 313.81 ஆகவும் பதிவாகியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கை ரூபா, அமெரிக்க டொலருக்கு எதிராக 5.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கி முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button