இந்தியா

வரவுசெலவு திட்டம் நிபுணர்களுடன் மோடி இன்று கலந்துரையாடல்

2026 மற்றும் 2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவுத்திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பெப்ரவரி முதாலம் திகதி தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.

அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த வரவுசெலவுத்திட்டம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில் வரவுசெலவு திட்டம் குறித்து பொருளாதார அறிஞர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாட உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க
உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button