உலகம்

போலந்திலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) நேற்று (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

ஸ்மார்ட் விங்ஸ் (Smart Wings) விமான சேவைக்குச் சொந்தமான 3Z-7648 என்ற இலக்கமுடைய இந்த விமானம், போலந்தின் வார்சோ (Warsaw) நகரிலிருந்து நேற்று இரவு 10.10 மணியளவில் தரையிறங்கியது.

இம்முதற்கட்டப் பயணத்திற்காக போயிங் 737 ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 180 சுற்றுலாப் பயணிகளும் 9 விமானப் பணியாளர்களும் வருகை தந்தனர்.

இனிவரும் காலங்களில் 2026 மார்ச் 15 ஆம் திகதி வரை வாரத்திற்கு ஒரு முறை (ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும்) இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.

இவ்விமானம் மூலம் வருகை தரும் போலந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் கடற்கரையோரப் பகுதிகள், சீகிரியா, தம்புள்ளை, கண்டி, நுவரெலியா மற்றும் யால ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுலா செல்லவுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போலந்து சுற்றுலாப் பயணிகளை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் சுற்றுலா நிறுவன அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button