
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண போட்டியில் இந்தியா அணியின் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான போட்டியில் அவர் 95 பந்துகளில் 171 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
குறித்த போட்டியில், 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 433 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.





