சுவிஸ்

விமான எரிபொருள் தட்டுப்பாடு: அவசரக் கையிருப்பை மீண்டும் திறந்தது சுவிஸ் அரசு

சுவிஸ் அரசு, தன் அவசரக் கையிருப்பிலிருந்து விமான எரிபொருளை மீண்டும் வெளியிடுகிறது. ஜெனீவா (Genève), சூரிச் (Zürich) விமான நிலையங்களுக்காக நவம்பர் இறுதிவரை 50,000 கன மீட்டர் எடுக்க அனுமதி கிடைத்துள்ளது.

நாட்டின் பொருளாதார விநியோகத்தைக் கவனிக்கும் சுவிஸ் அரசு அலுவலகம் (BWL) இதை அறிவித்தது. நவம்பரில் விமானப் பயணம் குறைவுதான். ஆனாலும் இந்த இரண்டு விமான நிலையங்களுக்கும் கையிருப்பிலிருந்து எரிபொருள் வர வேண்டியுள்ளது.

அக்டோபரிலும் சூரிச் விமான நிலையத்துக்காக 30,000 கன மீட்டர் வெளியிடப்பட்டது. இப்போது விமான எரிபொருள் கையிருப்பில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்கு எடுக்கப்பட்டுவிட்டது.

பல மாதங்களாகவே சுவிசில் எண்ணெய்ப் பொருட்களின் விநியோகம் இறுக்கமாக உள்ளது. ரைன் நதியில் கப்பல் போக்குவரத்து குறைக்கப்பட்டிருப்பதே முக்கிய காரணம். செப்டம்பர் முதல் இதுவரை நான்கு முறை அவசரக் கையிருப்பைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

பெட்ரோல், வீடு சூடாக்கும் எண்ணெய் ஆகியவை இப்போதைக்குப் போதுமான அளவு உள்ளன என்று அலுவலகம் கூறுகிறது. ஆனால் அவற்றின் விநியோகமும் இறுக்கமாகவே உள்ளது.


மூலம்: SRF
புகைப்படம்: Michael / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button