சுவிசின் ஊரி மாநிலத்தில் (Uri) உள்ள ஆண்டர்மாட் (Andermatt) நகரின் “The Japanese Restaurant” உணவகத்துக்கு மிஷலின் வழிகாட்டியின் மூன்றாவது நட்சத்திரம் கிடைத்துள்ளது. நேற்று மாலை ஆண்டர்மாடில் நடந்த விழாவில் இது அறிவிக்கப்பட்டது.
மிஷலின் (Michelin) என்பது சிறந்த உணவகங்களுக்கு நட்சத்திரம் கொடுக்கும் புகழ்பெற்ற உணவு வழிகாட்டி. மூன்று நட்சத்திரம்தான் மிக உயர்ந்த மதிப்பு. இந்த ஜப்பானிய உணவகம் The Chedi என்ற ஆடம்பர ஹோட்டலுக்குள் இருக்கிறது. இதுவரை இதற்கு இரண்டு நட்சத்திரம் இருந்தது. சமையலறையை டொமினிக் சாட்டோவும் (Dominik Sato) ஃபாபியோ டோஃபோலோனும் (Fabio Toffolon) நடத்துகிறார்கள்.
மூன்று நட்சத்திரம் பெற்ற ஐந்தாவது உணவகம் இது. இப்போது சுவிசில் மொத்தம் 133 உணவகங்களுக்கு மிஷலின் நட்சத்திரம் உள்ளது.
திச்சினோ மாநிலத்தில் (Ticino) மொர்பியோ இன்பேரியோரே (Morbio Inferiore) நகரிலுள்ள “Origini” உணவகம் முதல் முறையாக ஒரு நட்சத்திரம் பெற்றது. அதன் சமையல் கலைஞர் குக்லியெல்மோ கூர்ச்சியோ (Guglielmo Curcio) சுவிசின் சிறந்த இளம் சமையல் கலைஞராகவும் தேர்வானார்.
ஆனால் அஸ்கோனாவிலுள்ள (Ascona) “La Brezza” உணவகம் வழிகாட்டியிலிருந்து நீங்கிவிட்டது. அதன் சமையல் கலைஞர் மார்கோ கம்பனெல்லா (Marco Campanella) 2027 வசந்த காலத்தில் பாட் ராகாஸ் (Bad Ragaz) கிராண்ட் ரிசார்ட்டுக்கு மாறுகிறார்.
மூலம்: RSI
புகைப்படம்: Jon Handley / Unsplash





