சுவிசில் முதல் முறையாக 13வது மாத AVS ஓய்வூதியம் வரும் டிசம்பரில் வழங்கப்படுகிறது. ஆனால் சிலருக்கு, வழக்கமான ஒரு மாத ஓய்வூதியத்தை விடக் குறைவான தொகையே கிடைக்கும்.
இதைச் சமூகக் காப்பீடுகளைக் கவனிக்கும் சுவிஸ் மத்திய அலுவலகம் (OFAS) தெரிவித்துள்ளது. AVS என்பது சுவிசின் முதியோர் ஓய்வூதியத் திட்டம்.
ஜூலை 1 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு, ஒரு மாத ஓய்வூதியத்தின் பாதித் தொகை மட்டுமே கிடைக்கும்.
திருமணமான தம்பதிகளுக்கும் தொகை குறையலாம். திருமணமானவர்களுக்கு ஓய்வூதியத்தில் ஓர் உச்ச வரம்பு உண்டு. இரண்டாவது துணையும் ஓய்வு பெறும்போது அந்த வரம்பு பொருந்தும்.
2026 இறுதியில் கிட்டத்தட்ட 27 இலட்சம் பேர் இந்த 13வது ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இவர்களில் 8 இலட்சத்துக்கு மேற்பட்டோர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். சராசரி மாத ஓய்வூதியம் சுமார் 1,580 பிராங்க் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்: RSI
புகைப்படம்: Markus Kammermann / Unsplash





