சுவிஸ்

சுவிஸ்ஸில் விலைவாசி ஏற்றம்: எரிபொருள் விலைதான் காரணம்

சுவிஸ்ஸில் ஒக்டோபர் மாதம் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பைவிட விலைகள் சராசரியாக 1.5 சதவீதம் அதிகம் என்று சுவிஸ் மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Office fédéral de la statistique) அறிவித்துள்ளது.

செப்டம்பரில் இது 1 சதவீதமாகத்தான் இருந்தது. பொருளாதார நிபுணர்கள் இதைவிடக் குறைவாகவே எதிர்பார்த்திருந்தார்கள்.

விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் எரிபொருள். வீட்டை சூடாக்கும் எண்ணெய் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி விட்டது. பெட்ரோலும் டீசலும் கூட நன்றாக ஏறியுள்ளன.

ஒரு நிதி நிறுவன நிபுணர் இப்படிச் சொல்கிறார்: எல்லாப் பொருட்களின் விலையும் ஏறவில்லை. சுவிஸ் பொருளாதாரமும் அதிகமாகச் சூடேறவில்லை. எரிசக்தி விலை மட்டும் தனியாக உயர்ந்துள்ளது. ஆனால் எல்லாக் குடும்பங்களுக்கும் ஒரே பாதிப்பு இல்லை. இந்தக் குளிர்காலத்தில் எண்ணெயில் வீட்டை சூடாக்கும் குடும்பங்களுக்கும், தினமும் காரை நம்பி இருப்பவர்களுக்கும் செலவு அதிகமாக இருக்கும்.

வெளிநாட்டிலிருந்து வரும் பொருட்களின் விலைதான் ஏறுகிறது. சுவிஸ்ஸிலேயே தயாராகும் பொருட்களின் விலை சற்றுக் குறைந்துள்ளது. சுவிஸ் பிராங்க் வலுவாக இருப்பதால், இந்த விலை ஏற்றத்தின் தாக்கம் கொஞ்சம் குறைகிறது.


மூலம்: RSI
புகைப்படம்: Artists Eyes / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button