
சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிலும் வீட்டு விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், தனி வீடுகளின் விலை 2% அதிகரித்துள்ளதுடன், அடுக்குமாடி வீடுகளின் விலை 1.7% உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், தனி வீடுகளின் விலை 3.6% ஆகவும், அடுக்குமாடி வீடுகளின் விலை 5.9% ஆகவும் அதிகரித்துள்ளது.
நிலையான வட்டி வீதத்துடன் கூடிய அடமானக் கடன்களின் வட்டி அதிகரித்தாலும், வீட்டு விலைகளின் உயர்வைக் கட்டுப்படுத்த அது போதுமானதாக இல்லை என ரைஃபைசன் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். வீடுகளுக்கான பற்றாக்குறையே விலை உயர்வுக்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
பிராந்திய ரீதியாக, தனி வீடுகளின் விலை சூரிச் பகுதியில் 4.8% உயர்ந்துள்ளதுடன், மேற்கு சுவிட்சர்லாந்தில் 4.6% அதிகரித்துள்ளது. அடுக்குமாடி வீடுகளின் விலை தெற்கு சுவிட்சர்லாந்தில் அதிகபட்சமாக 7.4% உயர்ந்துள்ளது. சுற்றுலாப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி வீடுகளின் விலையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.9% அதிகரித்துள்ளது.





