தமிழீழம்

தியாக தீபத்தின் சிலை மீண்டும் பொலிஸ்நிலையத்திற்கு; பொறுப்பேற்க மறுத்த மன்று!

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நிலைவாலயத்தில் இருந்து பொலிஸாரினால் எடுத்து செல்லப்பட்ட தியாக தீபத்தின் சிலையை நீதிமன்றம் பொறுப்பேற்க மறுத்துள்ளது.

 

அதேவேளை , சிலை வைக்கப்பட்டமை மற்றும் நினைவாலயத்தில் பாடல் ஒலிக்க விடப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து . 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நல்லூர் ஆலய வடக்கு வீதியில்  உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தியாக தீபம், அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில்  26ஆம் திகதி காலை 10.48 மணிக்கு அவரது உயிர் பிரித்தது

இம்முறை  39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்  நடைபெற்ற வேளை தியாக தீபத்தின் சிலை ஒன்று வைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

நினைவேந்தல் நிகழ்வுகள் முடிந்து மறுநாள் 27ஆம் திகதி யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் நினைவாலயம் பகுதிக்கு சென்று சிலையை எடுத்து சென்றனர்

இந்நிலையில்,  நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சிலை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பொலிஸாரினால் சிலையை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் போது , சிலையை யார் வைத்தார்கள் ? அதன் பின்னணியில் யார் உள்ளனர் ? போன்ற எந்த அடிப்படையும் இல்லாது சிலையை மாத்திரம் மன்றில் ஒப்படைக்க முடியாது என கூறி மன்று சிலையை ஏற்க மறுத்தது.

அதனை தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று , மேலதிக நடவடிக்கையை எடுப்பதாக மன்றுக்கு கூறி பொலிஸார் சிலையை பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்

அதேவேளை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த கால பகுதியில் 18ஆம் திகதி நினைவாலயத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கி சாதனங்களை , அனுமதியின்றி ஒலிபெருக்கி பாவித்ததாக கூறி ,அவற்றை பொலிஸார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்

ஒலிபெருக்கி சாதனத்தில் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டமை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சிலை அகற்றப்பட்ட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் , சிலையை அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button