ஜோதிடம்

இன்றைய (03.10.2026) ராசிபலன்

மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளி வான முடிவுகளால் சுற்றியிருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவீர். வியா பாரத்தில் பங்குதாரர்கள் வளைந்து கொடுத்து போவர். அலுவலகத்தில் அமைதி காப்பீர். மேலதிகாரிகளின் அறிவுரையை ஏற்கவும்.

ரிஷபம்: சமயோஜிதமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். எதிர்பார்த்த கடனுதவி கிட்டும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.

மிதுனம்: மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், செலவு வரக்கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். முன்கோபம் வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் உதவியை நாடி பழைய நண்பர்கள் வருவர். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். பங்குதாரர்களின் அறிவுரையை உதாசீனப்படுத்தாதீர். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

சிம்மம்: உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் விலகும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். தந்தைவழி அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டி வரும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும்.

கன்னி: பிரபலங்களின் நட்பு கிட்டும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

துலாம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். பழைய நண்பர்களை எதிர்பாராமல் சந்திப்பீர். பூர்வீக வீட்டை அதிக செலவு செய்து சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவர். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரிப்பர்.

விருச்சிகம்: திட்டமிட்ட பணியை போராடி முடிப்பீர். சகோதர வகை யில் செலவு, அலைச்சல் வரும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம்.

தனுசு: எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். குடும்பத்தில் அமைதியுண்டு. பால்ய நண்பர்கள் உதவுவார்கள். உடன்பிறந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறாதீர்கள்.

மகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீட்டில் தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு தேதி குறிப்பீர்கள். மூத்த சகோ தரர் உதவுவார். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மனைவிவழி உறவினர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கை யாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீனம்: உங்களின் ஆளுமைத் திறன் கூடும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். முன்கோபம் விலகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button