தமிழீழம்

தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக தொடர்ந்த அணையாவிளக்கு போராட்டம் நிறைவு

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுமாறு வலியுறுத்தியும் நல்லூரில் முன்னெடுக்கப்பட்ட அணையாவிளக்கு தொடர் போராட்டம் இன்று (02) நிறைவடைந்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் நல்லூரில் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று இறுதி நாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், தியாகி திலீபனின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு அனுப்புவதற்கான மகஜர் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் சென்று, ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்ப்பாண அலுவலகத்தில் குறித்த மகஜரை கையளித்தனர்.

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button