உலகம்புதிய செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மைதானத்தின் ஒரு பகுதியை ரசிகர்கள் வாங்கும் வாய்ப்பு!

உற்சாகத்தில் ரசிகர்கள்

கால்பந்து ரசிகர்களுக்கு வரலாற்றின் ஒரு பகுதியை சொந்தமாக்கும் அரிய வாய்ப்பை வழங்கும் வகையில், 2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற மைதானத்தின் உண்மையான புல்வெளித் துண்டை கொண்ட வரையறுக்கப்பட்ட (Limited Edition) சேகரிப்புப் பொருளை FIFA அறிமுகப்படுத்தியுள்ளது.

“FIFA World Cup 2026 Piece of the Pitch – Foundation Edition” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்பு சேகரிப்புப் பொருளின் விலை 450 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

நியூயோர்க்–நியூஜெர்சி மைதானத்தில் நடைபெறவுள்ள 2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஆடுகளத்தில் இருந்து எடுக்கப்பட்ட உண்மையான புல்வெளித் துண்டு, உயர்தர அக்ரிலிக் (Acrylic) காட்சிப்பெட்டிக்குள் பாதுகாக்கப்பட்டு, அதனுடன் நினைவுப் பொருளாக USB ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

FIFA வெளியிட்டுள்ள விளக்கத்தில், “ஒவ்வொரு சேகரிப்புப் பொருளிலும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் உண்மையான ஆடுகளப் புல்வெளித் துண்டு இடம்பெற்றுள்ளது. இதனால் ஒவ்வொன்றும் தனித்துவமான நினைவுப் பொருளாக அமைகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பொருளில் அசல்தன்மையை உறுதிப்படுத்தும் (Authenticity) சான்று USB-யில் சேமிக்கப்பட்டிருக்கும். இது சிறப்பு வடிவமைப்புடைய உயர்தர பெட்டியில் (Premium Hinged Shoulder Box) வழங்கப்படுவதால், கால்பந்து ரசிகர்கள் மற்றும் சேகரிப்பாளர்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

FIFA Store தகவலின்படி, உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பின்னரே இந்த சேகரிப்புப் பொருள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் ஐரோப்பாஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இதை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த Foundation Edition சேகரிப்புப் பொருளின் அளவு 17.5 × 17.5 × 17.5 செ.மீ. ஆகும். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button