அரசியல்இலங்கைதமிழீழம்தமிழ்

திருமலை திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு அமைச்சர் திடீர் விஜயம்

திருகோணமலை திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு பிரதி அமைச்சரும், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா சனிக்கிழமை (04) கள விஜயம் மேற்கொண்டார்.

காலப்போக்கில் இயற்கை காரணங்களால் சேதமடைந்துள்ள இப்பகுதி , பின்னர் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளால் கடந்த ஆட்சிக் காலங்களில் விஷமிகளால் மேலும் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் ஸ்தலத்தை  உரிய முறையில் பாதுகாக்கவும், குறித்த பகுதியை சென்றடையும் வீதியைச் செப்பனிடவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கள ஆய்வில் சேருவிலை பிரதேச சபை உறுப்பினர் செல்வராசா சச்சிதேவன், வைத்திய கலாநிதி சதீஸ்குமார், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button