
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தாயகத்திலிருந்து சென்ற தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழக முதலமைச்சர் மற்றும் அங்குள்ள கட்சித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். சந்திப்பின் தொடர்ச்சியாக இன்று மேற்குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில், தாயகத்திலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கேசன், ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் க. சுகாஸ்; மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி ந. காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.







