சுவிற்சர்லாந்தில் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பி, ஒப்பற்ற ஆயுதப் போரியல் பாதைக்கு அத்திவாரமிட்ட வரலாற்று நாயகன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு வரும் மே 31, 2026 அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் மிக எழுச்சியாக நடைபெறவுள்ளது.
தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தேசியத் தலைவர் அவர்களின் நினைவாக இந்த உணர்வெழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வு பற்றிய விபரங்கள்:
நாள்: 31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: முற்பகல் 11:00 மணி முதல் மாலை 17:30 மணி வரை
நிகழ்விடம்:
Schulhausstrasse 12
8182 Hochfelden
Switzerland
“தமிழினத்தின் விடிவிற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த தேசியத் தலைவரின் நினைவலைகளைத் தாங்கி நிற்கும் இந்நிகழ்வில், சுவிற்சர்லாந்து வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் உரிமையோடு கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்” என மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.





