இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவுகளை கடந்தும் மற்றுமொரு தூபி அவுஸ்திரேலியாவில்.

எம் மாவீரரின் துயிலுமில்லங்களை இடிந்தால் வரலாற்றைமறைத்துவிடலாம்!” என எண்ணி பகற்கனவு கண்டு அன்று தாயகத்தில் எம் கல்லறைக் கோவில்களைத் மண்ணோடு மண்ணாகத் தகர்த்து விழாக் கொண்டாடியசிங்கள இனவெறியர்க்கு இப்பொழுது மீண்டும் கிலி பிடிக்கும் வகையில்

அவுஸ்திரேலியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்றையதினம் மாபெரும் எழுச்சியோடு திறந்து வைக்கப்பட்டது!

கனடாவில் தமிழீழ வரைபடம் ஏந்திய நினைவகம் கடந்த ஆண்டு இதே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் திறக்கப்பட்ட பொழுதே தமிழினப் பகைவர்கள் பைத்தியம் பிடித்ததுபோல் பொதுத்தளங்களில் வெறுப்புணர்வைக் கக்கினர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டில் அவுஸ்திரேலியாவிலும் சிட்னி நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

வலிகள் யாவும் தமிழினத்தை மேலும் வலிமையாக்கும்!

நேற்று (16.05.2026) சனிக்கிழமை, காலை
Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்து வைத்தார்.

சிட்னியில் உள்ள Pendle Hill Civic Park என்ற பொது இடத்தில், Cumberland நகர சபையின் பேராதரவுடன் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.

இந் நகரசபையினர்க்கும் இந்த வரலாற்று சிறப்பை முன்நின்று நிகழ்த்திய அன்பான அவுஸ்திரேலியத் தமிழ் உறவுகளிற்கும் எமது பாராட்டுக்கள்!

இனி வருங்காலங்களில் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் எம் நினைவுச் சின்னங்களாக தமிழரின் இனப்படுகொலை வரலாற்றை மட்டுமல்ல விடுதலை வரலாற்றையும், தமிழின அழிப்பின் கோரத்தையும் நாளைய உலகும் அறியும் வண்ணம் எடுத்தியம்பும் தூபிகள் மேலெழும் என மக்கள் கருத்து தெரிவிக்குன்றனர்.

விழ விழ வீழ்ந்து கிடக்காமல் மீண்டு எழும் தமிழினம் நெருப்பைப் போன்றது எனவும் கீழ் நோக்கிப் பிடித்தாலும் தீ மேல் நோக்கியே நிமிர்ந்து எழும்! எனவும் மக்கள் கருத்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

#Mullivaikkal #May18 #mullivaikalmemorial #Mullivaikkalmassacre #மே18 #Australia #சுவிஸ்தமிழர்தகவல்மையம் #SwissTamilInfo #SwissTamil

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button