தமிழீழம்

சிங்களமயமாக்கப்படும் யாழ்.பல்கலைக்கழகம் – கலைப்பீட மாணவர் ஒன்றியம் பகிரங்க குற்றச்சாட்டு

யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

பல்வேறு துறைசார்ந்த விரிவுரைகள் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டு சிங்கள மாணவர்களை உள்ளடக்கி சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் ஒரு பாரதூரமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பது தமிழர்களுடைய ஒரு மரபுரிமை சின்னம். தமிழர்களின் போராட்டத்தின் ஒரு அடையாள சின்னம். தமிழர்களின் பண்பாட்டு காவலரண் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இப்படியான பல்கலைக்கழகத்தில் மேற்குறித்த மோசமான செயற்பாடுகளிடமிருந்து மாற்றம் வேண்டும் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் மாணவர்கள் மீது காட்டுகின்ற மாற்றம் இதுதானா? எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

கடந்த அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? என்றும் அmவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button