சினிமா

எங்களது திருமணம் வழமை போன்று இருக்கக்கூடாது; விண்வெளியில் திருமணம் செய்ய விரும்பும் திரை ஜோடி!

எங்களது திருமணம் வழமையானதாக இருக்கக் கூடாது. ஓர் சாகசமாக இருக்க வேண்டும் என்று திருமணத்தை விண்வெளியில் நடத்த பிரபல நடிகர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் (63 வயது) என்பவரும் ஹாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் அனா டி அர்மாஸ் (வயது -37)  என்பவருமே தமது திருமணத்தை விண்வெளியில் நடத்த விரும்பியுள்ளனர்.

உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் (63 வயது) ,  1981 ஆம் ஆண்டில் வெளியான ‘Endless love’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  ‘மிஷன் இம்பாசிபிள்’ சீரிஸ் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றார்.

ஹாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் அனா டி அர்மாஸ். 2006 ஆம் ஆண்டிலல் வெளியான வெர்கின் றோஸ் ( ‘Virgin rose’)  படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு மொழி கடந்த ரசிகர்கள் உண்டு. அத்துடன் இவர்  2022-ல் வெளியான ‘தி க்ரே மேன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகின.

சாகசத்தை விரும்பும் இந்த ஜோடிகள் தங்கள் திருமணம் வழக்கமாக இருக்க கூடாது என்பதால்  தங்கள் திருமணத்தை விண்வெளியில் நடத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாம் குரூஸை பொறுத்தவரை விண்வெளி பயணம், சாகசங்களின் காதலன். இதனால் விண்வெளியில் திருமணம் செய்துகொள்ளப்போகும் முதல் ஜோடி என்ற ஐடியாவே அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button