இலங்கை

சுவிஸ் நாட்டின் முதல் ஏர்பஸ் விமானம் சூரிச் விமான நிலையத்தை வந்தடைந்தது.

சுவிஸ் நாட்டின் ஒரு வரலாற்று மைல்கலாக சுவிஸ் விமான சேவையில் 9 ஆம் தேதி ஒக்டோபர் 2025 அன்று, புத்தம் புதிய ஏர்பஸ் A350-900 உள்வாங்கப்பட்டு சூரிச் விமான நிலையத்திற்கு முதன்முதலாக வரும் வழியில் சுவிஸ் விமானப்படையின் ஜெட் விமானங்கள் அணிவகுப்பில் இணைந்து விமானக் குழுவில் புதிய உறுப்பினருக்கு பெருமைமிக்க வரவேற்பினை வழங்கி மதிப்பளித்தன.

அதனை தொடர்ந்து  முதல் ஏர்பஸ் A350-900 சூரிச் விமான நிலையத்தில் 15:25 மணிக்கு தரையிறங்கியது. இது சுவிஸ் சர்வதேச விமான நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

துலூஸில் உள்ள ஏர்பஸ் ஆலையிலிருந்து புதிய ஏர்பஸ் A350-900 எனும் புதிய விமானக் குழு உறுப்பினர் சூரிச்சிற்கு விமான நிலையத்தை வந்தடைந்தது, அங்கு 2000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள், விமான ரசிகர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஊடக படைப்பாளிகள் இந்த உணர்ச்சிகரமான தருணத்தை நேரடியாக அனுபவித்தனர்.

இந்த தனித்துவமான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதித்ததற்கு நன்றி தகவல் Swiss International Air Lines

#flyswiss #AirbusA350 #HBIFA #SWISSWanderlust #SwissAirForce

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button