விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் உடையில் தோனி – அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி இந்திய ப்ரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தநிலையில் தனது போட்டி அணியான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் பயிற்சி ஜெர்சியை தோனி அணிந்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, தோனி சென்னை அணியை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக வதந்திகள் மற்றும் ஊகங்கள் வேகமாகப் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கால்பந்து விளையாட்டுக்குப் பிறகு நண்பர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தோனி இந்த உடையை அணிந்துள்ளார்.

மேலும் இது அதிகாரப்பூர்வ போட்டி சீருடை அல்ல எனவும், மாறாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி மேலாடை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், சுமார் 18 ஆண்டுகளாக ‘மஞ்சள் நிறத்துடன் (CSK) நெருக்கமாக தொடர்புடைய தோனி, அவரது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button