இந்தியாஇலங்கை

இந்தியா – இலங்கை கப்பல் சேவையில் மாணவர்களுக்கு ரூ.9,999 சிறப்பு திட்டம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே நடைபெற்று வரும் இந்தியா–இலங்கை பயணியர் கப்பல் சேவையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், மாணவர்களுக்கான சிறப்பு சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் வெறும் ₹9,999க்கு மூன்று நாள், இரண்டு இரவு பயணத்தை மேற்கொள்ளலாம்

இதில் கப்பல் டிக்கெட், உணவு, தங்குமிடம் மற்றும் பயண வசதி அனைத்தும் அடங்கும். மேலும், மாணவர்களை அழைத்து செல்லும் இரு ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட்டும் வழங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட இந்த சேவையில், இதுவரை 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டு தொடங்கி மாணவர்கள் குறைந்த செலவில் கல்விச் சுற்றுலா பயணமாக இலங்கையை அனுபவிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிறப்பு சலுகை மூலம், தமிழகம் மற்றும் இலங்கையை இணைக்கும் இந்த கப்பல் சேவை, மாணவர்களுக்கு புதிய கற்றல் மற்றும் கலாச்சார அனுபவ வாய்ப்புகளை வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button