இரண்டு வருட இடைவேளைக்குப் பின்னர் வீனஸ் வில்லியம்ஸ் அமெரிக்க பகிரங்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடருக்குத் திரும்பவுள்ளார்.
45 வயதான அவருக்கு, மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாடுவதற்கான அழைப்பு நேற்று கிடைத்துள்ளது.
1981ஆம் ஆண்டு ரெனீ ரிச்சர்ட்ஸ் தமது 47 வயதில் இவ்வாறான போட்டியில் பங்கேற்றிருந்தார்.
இதன்படி, ரெனீ ரிச்சர்ட்ஸ்க்கு பின்னர் அமெரிக்க பகிரங்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் மிக அதிக வயதான அமெரிக்க வீராங்கனையாக வீனஸ் வில்லியம்ஸ் திகழ்வார்.
அமெரிக்க பகிரங்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.





