தமிழ் நாடு

தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இன்று அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு படகுகளில் வந்த மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களும் அவர்கள் பயணித்த இரு படகுகளும் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button