இலங்கை

இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக்கிங்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் (அரசு தகவல் திணைக்களம்) இன்று (30) பிற்பகல் முதல் ஹேக்கர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் சட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் செய்திகளை புதுப்பித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை அணுகும் பாவனையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு பணிப்பாளர் நாயகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button