
சீதுவ – லியனகேமுல்லயிலும் மன்னாரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 6000 இற்கும் அதிக போதைபொருள் வில்லைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லியனகேமுல்லயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 5488 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
52 வயதான சந்தேகநபர் புத்தளத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, 62 போதை வில்லைகளுடன் மன்னாரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 மற்றும் 30 வயதான இருவர் மன்னார் – தோட்டவெளியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.





