தெசின் மாநிலத்தில் (Ticino) உள்ள மெண்ட்ரிசியோ (Mendrisio) நகரிலும் இனி நாய் வைத்திருப்பவர்கள் நடக்கப் போகும்போது தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
நாய் சிறுநீர் கழித்தால், அந்த இடத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறுநீர் நீர்த்துப் போக வேண்டும். இது இப்போது கட்டாய விதி.
இந்த விதி இந்தக் கோடையில்தான் கியாஸ்ஸோ (Chiasso), அஸ்கோனா (Ascona) நகரங்களில் வந்தது. இப்போது மெண்ட்ரிசியோவும் அவற்றோடு சேர்ந்துள்ளது.
நகரை நிர்வகிக்கும் நகர சபை (Municipio) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தக் கோடையில் வெயில் அதிகமாக இருந்தது. பல நாட்கள் மழையும் இல்லை. அதனால் நாய் சிறுநீர் பிரச்சினையைப் பற்றி யோசிக்க வேண்டி வந்தது என்று சொல்கிறது. குறிப்பாக நகர மையங்களிலும், மக்கள் அதிகம் நடமாடும் இடங்களிலும் இது முக்கியம்.
நாய்கள் இயற்கை உபாதையைக் கழிப்பதற்கென்றே சில தனி இடங்களை அமைக்கவும் நகர சபை யோசித்து வருகிறது.
மூலம்: RSI
புகைப்படம்: Andriyko Podilnyk / Unsplash





