செயின்ட் கேலன் மாநிலத்தில் (St. Gallen) உள்ள வாட்வில் (Wattwil) நகரில் ஒரு தந்தையும் அவரது இரண்டரை வயது மகனும் இறந்து கிடந்தனர். செவ்வாய்க்கிழமை மாலை போலீசார் அவர்களைக் கண்டுபிடித்தனர்.
செவ்வாய்க்கிழமை காலையிலேயே போலீசுக்கு ஒரு தகவல் வந்தது. தந்தை குழந்தையைத் தாயிடம் திரும்பக் கொண்டுவந்து விடவில்லை. தாயும் தந்தையும் பிரிந்து வாழ்ந்தவர்கள். உடனே போலீசார் தேடத் தொடங்கினர்.
மாலையில் மாநில போலீசார் வாட்வில் நகரில் ஒரு வீட்டில் இருவரின் உடல்களையும் கண்டனர். அங்கு கிடைத்த தடயங்களின்படி, தந்தை துப்பாக்கியால் மகனைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். பிறகு அவர் தன்னையும் மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
இறந்த தந்தைக்கு 33 வயது. இருவரும் குரோஷியா நாட்டவர்கள். அவர்கள் அதே மாநிலத்தில் வசித்து வந்தனர்.
மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகம் இது பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை போலீசார் இந்தத் தகவலை அறிவித்தனர்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Alin Andersen / Unsplash





