சுவிஸ்

மோசடி இணையதளங்களை முடக்க சுவிஸ் சட்டத்தில் இடமில்லை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மோசடி இணையதளங்களை முடக்கச் சொல்லி இன்டர்நெட் நிறுவனங்களுக்கு உத்தரவிட முடியாது என்று சுவிஸ் உச்ச நீதிமன்றம் (Bundesgericht) தீர்ப்பளித்துள்ளது. தற்போதைய சட்டத்தில் அதற்கான அடிப்படை இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.

வோ மாநிலத்தில் (Vaud) முதலீட்டு மோசடி நடந்ததாக விசாரணை நடந்தது. சில இணையதளங்கள் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து 17 லட்சம் பிராங்குக்கும் அதிகமாகப் பறித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் பலர் ஏமாறாமல் இருக்க, அரசு வழக்கறிஞர் அலுவலகம் அந்த இணையதளங்களை முடக்கச் சொல்லி பல இன்டர்நெட் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

இன்ரெட் நிறுவனங்களில் ஒன்றான Init7 இந்த உத்தரவை எதிர்த்தது. வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இப்போது நீதிமன்றம் அந்த நிறுவனத்தின் பக்கம் தீர்ப்பளித்து, முடக்க உத்தரவை ரத்து செய்துள்ளது.

சூதாட்டச் சட்டம், தொலைத்தொடர்புச் சட்டம் போன்ற சில சிறப்புச் சட்டங்களில் மட்டுமே இணையதளங்களை முடக்க அனுமதி உள்ளது. பொதுவான குற்ற விசாரணை விதிகளில் அது இல்லை. மேலும் இப்படி முடக்கினால், சந்தேக நபர்களுக்கு மட்டுமல்ல, இன்டர்நெட் நிறுவனங்களுக்கும் சுவிஸ்ஸில் உள்ள எல்லா இன்டர்நெட் பயனாளர்களுக்கும் பாதிப்பு வரும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இணையதள முடக்கம் ஆன்லைன் மோசடிக்கு எதிராகப் பயனுள்ள வழியாக இருக்கலாம் என்றும் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. சைபர் குற்றங்கள் கூடி வருவதால், புதிய சட்டம் கொண்டுவர வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறியது.


மூலம்: SRF
புகைப்படம்: FlyD / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button